Breaking
Fri. Nov 15th, 2024

2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி ஏற்­ப­டுத்­தப்­பட்ட புரட்­சி­யிலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்­றி­யிலும் 90 வீத­மான பங்கு ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளு­டை­யது. எனவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எம்மால் தெரிவுசெய்­யப்­பட்­டவர். அவர் எமது கட்­சிக்கு உரித்­து­டை­யவர் என்ற வகையில் அவரை விட்­டுக்­கொ­டுக்கப்­போ­வ­தில்லை. எவ­ருக்கும் அவரை சொந்தம் கொண்­டாடும் அதி­கா­ரமும் இல்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க தெரி­வித்தார்.

தேசிய அர­சாங்­கத்தின் இருப்பை தக்க வைக்­கு­மாறு வலி­யு­றுத்தி ஐக்­கிய தேசிய கட்சி ஏற்­பாடு செய்­தி­ருந்த பொதுக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தற்­போது மஹிந்­த­வுக்கு ஆத­ர­வ­ளிக்கும் அவ­தா­ரங்கள் கோவி­லுக்குச் சென்று தேங்காய் உடைத்து நல்­லாட்சி அர­சாங்­கத்தை கவிழ்க்க பிரார்த்­தனை நடத்­து­கின்­றனர். இவர்­க­ளுக்குப் பின்னால் இது போன்ற மற்­று­மொரு வர­லாறும் உள்­ளது.

கடந்த 2001 ஆம் ஆண்­டிலும் இது போன்ற சிலர் எதிர்த்­த­மை­யினால் அன்று பிர­த­ம­ராக இருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க ஜப்பான் வழங்­க­வி­ருந்த 4.5 கோடி ரூ­பாவை எமது நாடு இழந்­தது. அன்று போல் இன்றும் சில எதி­ரி­களால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்­சியில் நாடு வள­மான, ஊழ­லற்ற அபி­வி­ருத்­தியை நோக்கி நகர்­வதை சகித்­துக்­கொள்ள முடி­யாமல் உள்­ளது.

மூன்று பிர­தான அமைச்­சுக்­களை கலைத்து ஜப்­பானின் உத­விக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டது. மக்­களை படு­குழியில் தள்ளி தமது வயிற்றை நிரப்­பிக்­கொள்­வ­தையே கடந்த ஆட்­சி­யா­ளர்கள் செய்­தனர்.

கடந்த காலத்தில் தேங்காய் உடைத்த போதும் தேங்காய்த் துண்­டுகள் சிதறி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஸ் குண­வர்­த்த­னவின் சட்டைப்பையில் விழுந்­தன. இவ்­வாறு தமது சட்டைப்பையை பாது­காத்­துக்­கொள்ளத் தெரி­யா­த­வர்கள் எப்­படி நாட்டை காப்­பாற்­றுவர்?

இவர்கள் கடந்த அர­சாங்­கத்தின் காலத்தில் மக்கள் பணத்தை சூறை­யா­டி­ய­மையை அறிந்­துதான் நாம் எதிர்­கா­லத்தில் இவர்கள் வேண்டாம் என தீர்­மா­னித்து மக்கள் ஆட்சிமாற்­றத்தை ஏற்­ப­டுத்­தினர். அதிலும் நல்­லாட்­சியின் நிமித்தம் வாக்­க­ளித்த 62 இலட்சம் பேரில் 90 வீத­மா­ன­வர்கள் ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வா­ளர்கள்.

அதனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எமக்கு உரித்­து­டை­யவர். அவரின் வெற்­றிக்கு வித்­திட்­ட­வர்கள் நாங்கள். எவர் கேட்­டாலும் அவ­ரை உரிமை கொண்­டாட விடப்­போ­தில்லை என்று பகி­ரங்­க­மாக அறி­விக்­கின்றோம்.

அதன் பிர­காரம் ஆட்சியதி­கா­ரத்­தையும் மக்கள் எமக்கு வழங்­கி­யுள்­ளனர். மக்களின் அபி­லா­ஷை­களை நிறைவேற்றும் முகமாக கடந்த அர­சாங்­கத்தில் ஊழல் புரிந்த­வர்­களை சட்­டத்தின் பிடியில் சிக்­க­வைப்­பதே எமது நோக்­க­மா­க­வுள்­ளது.

அதேபோல் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தான் கொள்­ளை­யிட்­டி­ருந்தால் தனது வயிற்றைக் கிழித்து பணத்தை எடுத்­துக்­கொள்­ளு­மாறு தெரி­வித்­துள்ளார். அதற்கு தனது பாரா­ளு­மன்ற உரையில் பதி­ல­ளித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தான் மஹிந்­தவின் வயிற்றை வெட்­டிக்­கொள்ள கத்­தி­யொன்றைத் தரு­வ­தாக தெரி­வித்­துள்ளார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா உரை­யாற்­றிய போது பாரா­ளு­மன்­றத்தில் முன்னாள் ஜனா­தி­பதி இல்லை. அதற்கு மாறாக அவர் பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து பீல்ட் மார்ஷலிடம் கத்தியை பெற்றுக்கொண்டு தமது வயிற்றைக் கிழிந்திருந்தால் எத்தனை முறை அவரின் வயிற்றை கிழிக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என சிந்திக்கும் போது வேடிக்கையாகவுள்ளது.

எவ்வாறாயினும் எமக்குக் கிடைத்த மக்கள் வரத்திற்கு நிகரான பிரதிபலனை நாட்டு மக்களுக்கு முழுமையாக வழங்குவோம் என்றார்.

By

Related Post