Breaking
Mon. Dec 23rd, 2024

A.S.M.இர்ஷாத்

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை அரியணையில் அமர்த்துவதற்காக வாக்களித்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நன்றிகளை வெளிப்படுத்தியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் தமிழ், முஸ்லிம் ஒற்றுமை வலுப்பெற இந்த வெற்றி பெரிதும் உதவுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொதுவேற்பாளர் வெற்றி குறித்து அவர் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். ஆவர் மேலும் கூறியதாவது:-

இந்த நாட்டில் சிறுபான்மை மக்களான தமிழர்களும் முஸ்லிம்களும் பட்ட துன்பங்கள், துயரங்கள் இனி முடிவுக்கு வரும். எல்லோரும் சமத்துவமாக வாழும் நிலை உருவாகும் என்பதை ஆணித்தரமாக கூறி வைக்க விரும்புகின்றேன்.

அதேபோன்று சிங்கள மக்களுடன் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ மைத்திரிபாலவின் வெற்றி பெரிதும் வழிவகுக்குமென நம்புகின்றேன்.

நாட்டில் நல்லாட்சி ஏற்படவேண்டுமென்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும். அதற்கான காலம் கனிந்துவிட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொருத்தமான நேரத்தில் மேற்கொண்ட தீர்க்கமான முடிவின் பிரதி பலனை நாம் இன்று உணர்கின்றோம்.

இந்த வெற்றியின் பங்காளரான எங்கள் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் தொண்டர்கள் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கினறேன். எமது பகீரத முயற்;சிக்கு உதவிய ஊடகவியலாளர்களுக்கும், புத்திஜீவிகளுக்கும் கட்சியின் சார்பில் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
நாட்டில் நல்லாட்சி மலர எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்

Related Post