Breaking
Thu. Dec 26th, 2024
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வெற்றியடையச் செய்ய எனது முழு ஆதரவினையும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கு வழங்குவேன் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மஹாவலி கேந்திர நிலையத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நேற்று (26) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்திலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தக் கட்சிக்குள் நிலவும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக குழு ஒன்றை நியமிக்குமாறும் சமல் ராஜபக்ஸ ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிக்குள் நிலவும் உட்பூசல்களைத் தடுக்க ஜனாதிபதியின் தலையீட்டின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்படுவதற்கு அனுமதிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

By

Related Post