ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர், பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
குறித்த கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் பங்காளியாக இருந்து வெளியேறியுள்ள நிலையில் கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, நல்லாட்சி, அரசியல் யாப்பு மாற்றம் போன்றவற்றை ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.