பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவையும் நடைமுறைச் சாத்தியமற்றது ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி அரசில் இணைந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழு மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் பொது வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவிப்பது எனத் தீர்மானித்தது.
இவற்றில், 24 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை அமைச்சரவைக்கு வழங்குதல், அரசிலுள்ள 20 அமைச்சர்களை எதிர்க்கட்சிக்கு அழைத்துவருதல், 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்குதல் என்பன அடங்குகின்றன.
இந்த எந்தவொன்றும் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதனாலேயே தான் கட்சியிலிருந்து விலகி அரசில் இணைந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.