Breaking
Thu. Dec 26th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் புதிய தேசிய  அரசாங்கம் அமைக்கப்படும் என்று பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், அந்த அரசாங்கம்  18 அமைச்சர்களைக் கொண்டதாக இருக்குமென்று ஊகங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான தகவல் கசிந்திருப்பதாக “சண்டே லீடர்’ நேற்று ஞாயிற்றுக்கிழமை  தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கத்தில்  மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் பதவி வகிப்பார்களென ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு நிதியும் அத்துரலிய ரத்ன தேரருக்கு மத ,பௌத்த விவகாரமும் ராஜித சேனாரட்ணவுக்கு உள்விவகாரமும் மங்கள சமரவீரவுக்கு வெளிவிவகாரமும் ரவி கருணாநாயக்கவுக்கு வர்த்தக வாணிபமும் சம்பிக்க ரணவக்கவுக்கு பெற்றோலிய, சக்தி வளத்துறையும் சஜித் பிரேமதாஸவுக்கு சுற்றாடல் துறையும் துமிந்த திசாநாயக்கவுக்கு கல்வியும்,  ஜோன் அமரதுங்கவுக்கு மீன்பிடித்துறையும் வழங்கப்படுமென ஊகங்கள்  வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே இந்த 12 பேரினதும் பொறுப்புகள் குறித்து ஆராயப்பட்டுள்ள நிலையில், மேலும்  6 பேரினதும் பெயர்கள் தற்போதைய நிலைவரத்தை அவதானித்த பின்னர் அறிவிக்கப்படுமென எதிரணி வட்டாரங்களை மேற்கோள்காட்டி “சண்டே லீடர்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.  பொலநறுவையில்  27 ஆம் திகதி இவை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் சாத்தியம் இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Post