Breaking
Sat. Dec 28th, 2024

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்யும் முகமாகவும், மத்திய கொழும்பில் இலங்கையின் அரசியல் வராலாற்றில் சரித்திரம் படைக்கும் வெற்றியாக மத்திய கொழும்பில் பொது வேட்பாளருக்கு அதிகப்படியான வாக்குகளை பெற்றுக் கொடுக்கும் நோக்குடனும் நாளை (20) சனிக்கிழமை 5.00 மணிக்கு மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் உள்ள புதுக்கடை அப்துல் ஹமீட் வீதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயம் மேல் மாகாண சபை உறுப்பினர்களாகவும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்களாகவுமுள்ள பைரூஸ் ஹாஜியினதும், முஜிபுர் ரஹ்மானினதும் தலைமையில் திறக்கப்படவுள்ளது.

இவ்வைபவத்துக்கு பிரதம அதிதியாகவும் பிரதான பேச்சாளராகவும் ஐக்கிய தேசியக் கட்ச்சியின் பிரதி தலைவர் ரவி கருணாயக்க மற்றும் ஐக்கிய தேசியக்கட்ச்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜீவ சேனாநாயக்க, றோசி சேனாநாயக்க, ஹர்சடி சில்வா, பாலித தேவபெறும, ஹிரான் விக்ரமதுங்க, றுவான் விஜயவர்த்தன ஆகியோர்கள் சிறப்பு பேச்சாளர்களாக களந்து கொண்டு மைத்திரி பாலவின் வெற்றிக்காக உரையாற்ற உள்ளனர்.

இதற்காக மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் உள்ள அனைத்து வாக்கால பெருமக்களையும் அன்புடன் அழைக்கின்றனர் மேல் மாகாண சபை உறுப்பினர்களான பைரூஸ் ஹாஜியும், முஜிபுர் ரஹ்மானும்.

Related Post