Breaking
Fri. Dec 27th, 2024

கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அந்த அமைப்பின் கூட்டத்தில் அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை கூறியுள்ளார்.

போரில் வெற்றி பெற அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய தலைவருக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டம் இம்முறை முன்னெடுக்கப்படுகிறது.இன்று வைக்கப்பட்டுள்ள பொறியே அன்றும் வைக்கப்பட்டது.இதே எதிர்சக்திகள் அன்றும் செயற்பட்டன.

நாட்டை வெற்றிபெற செய்த தலைவருக்கு அவரே கட்டளைகளை வழங்கிய இராணுவ  தலைவர் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி எதிரணி வேட்பாளராக மாற்றினார்.

போரை வென்ற அணியில் இருந்து அதற்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய அரசியல் கட்சியின் செயலாளரே இன்று எதிரணி வேட்பாளராக போட்டியிட வைக்கப்பட்டுள்ளார். இதுவே இன்று முன்னெடுக்கப்படும் சதித்திட்டம் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பொதுபல சேனா எந்த வேட்பாளருக்காகவும் குரல் கொடுக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஞானசார தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ள போதிலும் பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வருகிறது என்பது அந்த அமைப்பின் கருத்துக்கள் மூலம் தெளிவாகியுள்ளது.

பொதுபல சேனா அமைப்பு மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மகிந்தவுக்கு எதிராகவே வாக்களிப்பாளர்கள் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Related Post