Breaking
Wed. Jan 8th, 2025

அஸ்ரப் ஏ சமத்

இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவில் 06 ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனா்.

வடக்கு – பல்லியக்கார, கிழக்கு – ஒஸ்டின் பொ்னான்டோ, சப்ரகமுவ – வி.எம்.ஏ. ஆர். பேரேரா, மத்திய மாகாணம் – சுரங்கினி எல்லாவல , வடமத்தி – பி. திசாநாயக்க, ஊவா மாகாணம் – சட்டத்தரணி ஜயசிங்க ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இம்முறை முஸ்லீம் கள் ஆளுனராக நியமிக்கப்படவில்லை.

கடந்த 10 வருடமாக அலவி மௌலான பதவி வகித்தாா். இவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவினால் நியமிக்கப்பட்டவர். அவரின் இடத்துக்கு தமிழா் ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

முதல் ஆளுநராக தென் மாகாணத்தில் காலம் சென்ற பாக்கீா் மாா்காா் கடமை வகித்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல் முஸ்லீம் முதலமைச்சராக பதவி வகித்த பெருமை நஜீப் ஏ மஜீதை சாரும்.

Related Post