இந்தியா, இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகள் மத்தியில் நட்புரிமையும் நல்லுறவும் நிலவுகிறது.
இந்தியாவும் இலங்கையும் சீனாவை பொறுத்தவரை முக்கியமான நாடுகளாகும்.
இந்தநிலையில் இந்தியாவுடன் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் அதேநேரம், இலங்கையுடனும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்ள தமது நாடு தயாராகவுள்ளதாக சீன பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையும் இந்தியாவும் அணு உடன்படிக்கை உட்பட்ட பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டநிலையிலேயே சீனாவின் கருத்து வெளியாகியுள்ளது.