முன்னாள் சுகாதார அமைச்சரும் எதிர்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவர் நேற்று அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளதால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பு அவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.