ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைதிரிபால சிறிசேனவின் தகவல்கள் அடங்கிய விக்கிபீடியாவில் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் என்று திருத்தப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை 5.10க்கே இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த திருத்தம் 5.20க்கே மீண்டும் திருத்தப்பட்டு, “2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன” என்ற வசனம் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.