– நஜீப் பின் கபூர் –
நேற்று (01) நடைபெற்ற மே தினம் ஜனாதிபதி மைத்திரிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்குமிடையிலான ஒரு நேரடி யுத்தமாகவும் ஒரு கௌரவப் பிரச்சினையாகவும் இருந்தது.
இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய மே தினத்தை நாம் கிருலபனையியே நடாத்துவேம் என்று அவர்கள் நேற்றுவரை மார் தட்டிக் கொண்டிருந்தார்கள். அதே போன்று தங்கள் அணியிலுள்ள 52 பேரில் மூன்று பேரைத்தவிர ஏனைய அனைத்துப் பாரளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் கிருலபனைக்கு சமூகம் தருவார்கள் என்றும் அவர்கள் அடித்துக் கூறினார்கள்.
ஆனால் அந்த அணியிலுள்ள பத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தலைமறைவாகி விட்டார்கள். கடந்த இரவு தனிப்பட்ட ரீதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, தனது அணி உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு வருகையை உறுதிப்படுத்திக் கொள்ள முனைந்தபோது சிலர் தமது தொலைபோசியை செயலிழக்கச் செய்திருந்தனர்.
கிருலபனை கூட்டத்தை விட பல மடங்கு மக்கள் கூட்டம் காலியில் கூடி இருந்ததை உளவுத்துறையினர் உறுதி செய்திருக்கின்றனர். எனவே மே தினத் தேர்தலிலும் மஹிந்த பட்டுப்போய்விட்டார். மஹிந்தவுக்கு கடைக்குப்போன ஊடகங்கள் இப்போது கூடிய மக்கள் தொகை பற்றி வாய் திறக்கமல் ஊமையாகி இருக்கின்றார்கள்.