Breaking
Sun. Dec 22nd, 2024

கடந்த அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வையில் தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அங்கம் வகித்தார் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

கடந்த அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட செயற்­பா­டுகள் குறித்து தற்­போ­தைய அர­சாங்கம் குற்றம் சுமத்தி வரு­கின்­றது எனவும் அந்த அனைத்து குற்­றங்­க­ளையும் மஹிந்த ராஜ­பக்ஸ தனித்து செய்­ய­வில்லை எனவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

கடந்த கால அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­களில் ஏதேனும் தவ­றுகள் இருந்தால் அப்­போ­தைய அமைச்­ச­ர­வையில் அங்கம் வகித்த மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும்­அ­தற்­கான பொறுப்­பினை ஏற்­றுக்­கொள்ள வேண்­டு­ம்.

தற்­போ­தைய ஜனா­தி­பதி அந்தப் பொறுப்­பி­லி­ருந்து தப்­பிக்­கொள்ள முடி­யாது எதிர்க்­கட்­சியை மேடை­களில் ஏறி திட்­டு­வ­தனை நிறுத்­தி­விட்டு நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் சேவை­யாற்­று­மாறு கோரு­வ­தாகத் தெரி­வித்­துள்ளார்.

By

Related Post