Breaking
Mon. Dec 23rd, 2024

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தொடர்பான தனது தனிப்பட்ட அனுபவங்கள் பற்றிய நூல் ஒன்றை எழுத ஆரம்பித்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் நேற்று முன்தினம் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த நாட்களில் அவர்கள் செய்தவை பற்றி இப்போது தன்னால் பேச முடியும் என்றும், இந்த விடயம் பற்றி நூற்றுக்கணக்கான நூல்களை எழுத முடியும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி தனக்குத் தரப்படவில்லை என்பதற்காக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து தான் விலகவில்லை என்றும், அவர்களின் கொள்கைகளுடன் இணங்கிச் செல்ல முடியாமலேயே தான் வெளியே வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

By

Related Post