பொலன்னறுவையில் வைத்து முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் வகையில் குண்டுத் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கு விசாரணை மீதான தீர்ப்பு இன்று (22) வழங்கப்படும்.
2000 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரொருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை கடந்த 15 வருடங்களாக நடந்துவந்தது. இதன் மீதான தீர்ப்பே இன்று வழங்கப்படுகிறது.
பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி அமேந்திர செனவிரத்ன முன்னிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டது.
சிவராஜா ஜெனீவன் என்ற சுல்தான் காதர் மொஹிதீன் என்ற சென்னன் என்ற பெயருடைய பிரதிவாதிகளுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசு சிரேஷ்ட வழக்குரைஞர் திலிப பீரிஸின் வழி நடத்துதலில் சேனக குமாரசிங்க இந்த வழக்கில் சாட்சியமளித்தார்.
குற்றவாளிகளின் கருத்துக்களை இரகசியப் பொலிஸில் வைத்து குறித்துக்கொண்டேன். அதற்கு முன்னர் அது தொடர்பான சட்ட நிலைமையை பிரதிவாதிக்கு எடுத்துக் கூறினேன்.
தமிழில் கூறியவற்றை பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரத்நாயக்கா சிங்களத்தில் மொழி பெயர்த்தார். பொலிஸ் கான்ஸ்டபள் ராஜபக்ஷ அதனை டைப் செய்தார். தமிழில் பிரதிவாதி கைச்சாத்திட்டார்.
பின்னர் ரத்நாயக்கவும், ராஜபக்ஷவும் கைச்சாத்திட்டோம் என்று தெரிவித்தார். குற்றப் பத்திரங்கள் தொடர்பான சம்பந்தப்பட்ட பகுதிகளில் குறியிட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பான தீர்ப்பு இன்று 22 ஆம் திகதி வழங்கப் படும்.