Breaking
Mon. Dec 23rd, 2024

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடையில் புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான பேச்­சு­வார்த்­தைகள் மீண்டும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான அடிப்­படை செயற்­பா­டு­களை அமைச்சர் எஸ்.பி.திசா­நா­யக்க முன்­னெ­டுத்­து­ வ­ரு­கின்றார்.

எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வெற்­றி­பெ­ற­வேண்டும் என்­ப­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­வே­னவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவும் இணைந்து பணி­யாற்­ற­வேண்டும் என கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­ளர்கள் தெரி­வித்­து­வ­ரு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

அந்­த­வ­கையில் அமைச்சர் எஸ்.பி. திசா­நா­யக்­கவின் தலை­மையில் விரைவில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கும் இடையில் விரைவில் முக்­கிய பேச்­சு­வார்த்தை ஒன்று நடை­பெறும் என தெரி­ய­வ­ரு­கின்­றது.

இதற்கு முன்­னரும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிவேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post