Breaking
Fri. Jan 10th, 2025

அஸ்ரப் ஏ சமத்

மைத்திரி இல்லாமல் ரணில் இல்லை. ரணில் இல்லாமால் மைத்திரி இல்லை. மகிந்த கௌரவமான முறையில் ஜனாதிபதித் தேர்தலில் தோற்றால் அமைதியாக வீட்டில் இருக்க வேண்டும் என இன்று நடைபெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் மத்திய மாகாண சபை உறுப்பிணா அசாத் சாலி தெரிவித்தார்.

அவர் மீள தமது சகோதராகளையும், சக ஆட்களையும் பாதுகாக்க மீள அரசியலில் புக நாம் இடமளியோம். இந்த நாட்டில் உள்ள சிறுகட்சிகள் ஜ.தே.கட்சி மற்றும் சிறுபாண்மைச் சமுகங்கள் இணைந்து மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக்கினோம்.

இன்று சந்திக்க வரும் மகிந்தவை அவரது உள்ளாடையைக் கூட பரிசோதனை செய்தே மைத்திரியை சந்திக்க விட வேண்டும்.

அவாகளது மகன் நாமல் ராஜபக்சவின் பாதுகாவலா துப்பாக்கியுடன் மைத்திரி இருக்கும் இடத்திற்குச் சென்றிருக்கிறா ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு பொலிஸ் எம்.எஸ்.ரி இருவா பாதுகாப்புக்கு இருக்க வேண்டும். அவருக்கு துப்பாக்கியுடன் இரானுவம் பாதுகாப்பு அலுவலகரை யா நியமித்த்து.

இந்த நாட்டில் மகிந்த செய்த களவுகள், சிறுபாண்மையினருக்கு இழைத்த கொடுமைகள் சொல்லொன்னாத் துன்பங்களில் இருந்து நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனா. இதனை தடுத்து அவரை மீள பிரதமராக்குவதாகவும் ரணிலை வீட்டுக்கு அனுப்புவதாகவும் திலான் பெரேரா தெரிவித்திருந்தா. அதற்கு நாங்கள் விடமாட்டோம்.

20ஆவது திருத்தம் பற்றி இன்று ரணில் விக்கிரமசிங்கவுடன் சிறிய கட்சிகள் பேச்சுவாத்தை நடத்துகின்றோம். அதில் நமது சமுகத்திற்கும் சிறிய கட்சிகளுக்கும் பாதிப்பு இல்லாத தீர்மாணத்தை நாம் எதாப்பாக்கின்றோம்.

தறபோதைய ஜனாதிபதியும் பிரதமரும் சிறுபாண்மை பாராளுமன்ற பிரநிதித்துவ பாதிப்பாக தீர்மாணம் எடுப்பதில்லை எனச் சொல்லியிருக்கின்றா.

மைத்திரிபாலவை வெற்றியின் பின் இணைந்து கொண்டவாகள்தான் தற்போது இந்த அரசை விமர்சனம் செய்கின்றனர்.

Related Post