மையவாடி பள்ளிவாசல்களின் உட்கட்டமைப்பு வசதிகளை விஸ்தரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். S.M.M இஸ்மாயில் (Ph.D) அவர்கள் தெரிவிப்பு. இதற்கான கலந்துரையாடல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் பணிமனையில் இடம்பெற்றது.
எதிர்வரும் தினங்களில் எமது பிரதேசத்தில் காணப்படும் மையவாடி பள்ளிவாசல்களின் உட்கட்டமைப்பு வசதிகளை துரிதமாக நிறைவேற்றுவதற்கான செயற்திட்ட அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளதாக எமது பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டார்கள். அந்தவகையில் தைக்கா பள்ளிவாசல், கயர் பள்ளிவாசல், சலாம் பள்ளிவாசல், முஅல்லா பள்ளிவாசல், அழ்பர் பள்ளிவாசல் நிர்வாக தலைவர்கள், செயலாளர்கள் மத்தியில் பேசும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்கள்.
மேலும் பள்ளிவாசல்களின் மையவாடிகளின் உள்வீதிகள் சேதமடைவதால் ஜனாசாக்களை கொண்டு செல்வது சிரமமாக உள்ளது. இவற்றை சீர்செய்து தருவதாகவும் , இரவு நேரங்களில் மையவாடிகள் இருள் சூழ்ந்தவண்ணமாகவே உள்ளமையாலும் மேலும் இரவு நேர ஜனாசாக்களை அடக்கம் செய்வதில் போதிய வெளிச்ச வசதிகள் குறைவாகவே உள்ளதாலும் பொதுமக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். எனவே இவற்றை துரிதமாக கொண்டுசெல்லும் பொருட்டு இதற்கான செயற்திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. என்று கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். S.M.M இஸ்மாயில் அவர்கள் குறிப்பிட்டார்கள்.