Breaking
Mon. Dec 23rd, 2024

மொனராகலையில் கடும் மழை காரணமாக குளமொன்று உடைப்பெடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் அப்பிரதேசத்திலிருந்து அவசர கதியில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழைகாரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொனராகலை மாவட்டமும் ஒன்றாகும்.

கடும் மழைகாரணமாக இங்குள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள மடுல்லை பிரதேசத்தை அண்மித்த உடுமுல்லை கிராமத்தின் அருகில் அமைந்திருந்த குளத்தின் அணைக்கட்டு நேற்றிரவு உடைப்பெடுத்துள்ளது.

அதனை அண்டிய பிரதேசங்கள் எங்கும் தற்போது வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு வருகின்றது.

இதன்காரணமாக அப்பகுதியில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இக்குடும்பங்களின் அனைத்து உடைமைகளும் வெள்ளத்தில் பறிபோயுள்ள நிலையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி நகர்த்தப்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

By

Related Post