Breaking
Mon. Dec 23rd, 2024

ரகர் வீரர் வசீம் தாஜூடினின் செல்லிடப்பேசி மெமரியின் உள்ளடக்கத் தகவல்கள் மீட்கப்பட்டுள்ளன.

தாஜூடீனின் செல்லிடப்பேசி மீளப் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்த போதிலும், செல்லிடப்பேசியின் நினைவகப் பகுதியில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள், குறுந்தகவல்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் போன்ற தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவு ஆய்வு அறிக்கை ஒன்றை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.

செல்லிடப் பேசி நினைவகத்திலிருந்து மீட்கப்பட்ட தகவல்கள் இறுவட்டு ஒன்றில் பதியப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாஜூடீன் வாகன விபத்தில் உயிரிழக்கவில்லை படுகொலை செய்யப்பட்டதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

இதன் அடிப்படையில் செல்லிடப் பேசியின் தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்துமாறு புலனாய்வுப் பிரிவினர் நீதவானிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவு ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கும் அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

புதிதாக இரசாயன பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பிரப்பித்த உத்தரவிற்கு அமைய புதிய அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

By

Related Post