Breaking
Mon. Dec 23rd, 2024

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடமொன்றில் ஏற்பட்ட இராசாயன கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (4) பெய்த கடும் மழை காரணமாக மின்னல் தாக்கத்தால் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என சந்தேககிக்கப்பட்ட போதும் இராசாயன கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

மொரட்டுவ கட்டுபெத்தவில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்கு சொந்தமான கட்டடமொன்றின் இரண்டாம் மாடியில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.

மொரட்டுவ மற்றும் தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகரசபைகளுக்குச் சொந்தமான ஐந்து தீயனைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதும் கட்டடத்திற்கும் பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட மொரட்டுவ தீயணைப்பு பிரிவினர், ஆய்வு கூடமொன்றில் ஏற்பட்ட இரசாயன கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

By

Related Post