Breaking
Mon. Dec 23rd, 2024

பண்டாரவளையைச் சேர்ந்த மொஹமட் அஸ்மி (17 வயது) என்ற மேற்படி மாணவரை கடந்த (14/06/2015)ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என www.acmc.lk செய்தி வெளியிட்டு இருந்தது அறிந்ததே..

இது பற்றி பண்டாரவளைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டு இருந்த நிலையில் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி இருந்த அதேவேளை,

சற்றுமுன் எம்மை தொடர்பு கொண்ட தகவலை வெளியிட்டவர், குறிப்பிட்ட மாணவர் கிடைக்கப் பெற்றுள்ளதாக எம்ம்மிடம் தெரிவித்தார்.

பண்டாரவளையைச் சேர்ந்த இவர் வீட்டில் அறிவிக்காமல் கொழும்பில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று அங்கு தங்கி இருந்துள்ளார்.

இவரின் தொடர்பு இல்லாமல் அச்சமடைந்த வீட்டினர் போலீசில் முறைப்பாடு செய்து தேடி வந்த நிலையில் நேற்று இவர் இருக்கும் இடம் பற்றிய விபரங்கள் தெரிய வந்ததாக தெரிவிக்கபடுகிறது.

Related Post