இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பணத்தினை மோசடி செய்யும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அநுராதபுரம் சி.டி.சி. வரவேற்பு மண்டபத்தில் போக்குவரத்துச் சபை ஊழியர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.