அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற சானியா மிர்சாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதியில் வென்று சாம்பியன் பட்டம் வென்ற சானியா மிர்சாவுக்கு எனது வாழ்த்துகள். இந்த சாதனை குறித்து நாங்கள் பெருமையடைகிறோம் என்று தனது வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் இறுதிக்கு முன்னேறிய ஜப்பான் வீரர் நிஷிகோரிக்கும் பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
”அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளிலிருந்து மற்றொரு நற்செய்தி கிடைத்துள்ளது. இறுதிப் போட்டியில் வென்றிட நிஷிகோரியை நான் வாழ்த்துகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்”.