இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேரளாவிற்கு விஜயம் மேற்கொள்ளும்போது கொலை செய்யப்போவதாக ஐ.எஸ். கள் கடிதம் மூலம் அச்சுறுத்தியுள்ளனர்.
திருவனந்தபுரம் தம்பனூரிலுள்ள பா. ஜ. க. அலுவலகத்திற்கு வந்த மர்ம கடிதத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இங்கிலாந்து நாட்டின் தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெயின்ஸ் என்பவரை கொல்லும் முன்பு அவர் முகமூடி அணிந்த is வாதி முன்பு மண்டியிட்டு இருப்பது போன்ற படம் ஒட்டப்பட்டிருந்தது.
அந்த படத்தில் டேவிட் ஹெயின்சுக்கு பதில் பிரதமர் மோடியின் படம் ஒட்டப்பட்டிருந்தது. அதற்கு கீழ் நரேந்திர மோடி குஜராத்தில் முஸ்லிம்களை கொலை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இப்போது பாகிஸ்தான் முஸ்லிம்களை கொன்று வருகிறார்.
அவர், கேரளாவுக்கு வந்தால் அவருக்கு இதில் ஒட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தில் மண்டியிட்டு இருக்கும் நபரின் கதிதான் ஏற்படும் என மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது.
இந்த கொலை மிரட்டல் கடிதம் வந்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.