Breaking
Wed. Dec 25th, 2024

கொழும்பு நீதிமன்றத்தில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, தமிழக மீனவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களை மீட்க தமிழக அரசு செலவு செய்து வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் பேசியதாகவும், 5 மீனவர்கள் விரைவில் இந்தியா திரும்ப உள்ளனர் எனவும், எந்த பொறுப்பும் இல்லாத சுப்பிரமணியசுவாமி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளதாக இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-

இலங்கை ஜனாதிபதியுடன் நமது பிரதமர் பேசியிருந்தால் வரவேற்பிற்குரியது. ஆனால் அதை ஏன் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கவில்லை?.

சுப்பிரமணியசுவாமி தொடர்ச்சியாக தமிழர்கள் நலனுக்கு எதிராக, குறிப்பாக தமிழக மீனவர்களுக்கு எதிராக பேசுபவர். தமிழகம் முழுவதும் மீனவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில் 5 மீனவர்கள் விடுதலையாக உள்ளதாக அவர் இணையதளத்தில் தெரிவித்த தகவல் போராட்டங்களை மழுங்கடிக்கச் செய்யும் செயலாக உள்ளது.

பிரதமர் பேசியது உண்மையாக இருந்தால் அதை உடனடியாக வெளியிடவேண்டும்.

இத்தாலி நாட்டு கடற்படையினரை மீட்க அந்த அரசு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்ததுபோல தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

Related Post