மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு எஸ்.எல்.எஸ். தரச் சான்றிதழ் ஒன்றை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த இந்த திட்டமானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உற்பத்தி செய்யப்படும் அனைத்து தலைக்கவசங்களும் எஸ்.எல்.எஸ். 517 தரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக மோட்டார் சைக்கிள் விபத்துக்களும், அதனால் ஏற்படும் விபத்துக்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன. அதற்கு உரிய தரமற்ற தலைக்கவசங்கள் அணியாமை மற்றும் தலைக்கவசம் விபத்தின் போது தூக்கி எறியப்படுவதுமே காரணம் என பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், மோட்டார் சைக்கிள் விபத்துக்களின்போது இடம்பெறும் உயிரிழப்புக்களை தவிர்க்கும் வகையில் எஸ்.எல்.எஸ் தரமுள்ள தலைக்கவசங்கள் அணியப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.