செய்யித் அப்ஷல்
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் சந்தியில் சற்று முன்னர் (ஞாயிறு இரவு 10.30 மணி) இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கிரான் பகுதியைச் சேர்ந்த எஸ். ஆதித்தன் (வயது 36) மற்றும் விநாயகம் ஜெயபிரதாப் (வயது 24) ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர்.
கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் வேக கட்டுப்பாட்டை மீறி கிரான் பாடசாலைக்கு எதிரில் வீதி ஓரத்தில் இருந்த மின் கம்பம் மீது மோதியதாலேயே விபத்து சம்பவித்துள்ளது.
இரண்டு பேரினது சடலங்களும் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.