நாட்டில் கடந்த ஏழு மாதங்களில் இடம்பெற்ற விபத்துகளில் 50 சதவீதமானவர்கள் மோட்டார் சைக்கிள் விபத்துகளால் உயிரிழந்துள்ளனர் என வீதி பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனை வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிசிர கொடகொட தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் 666 பேர் மோட்டார் சைக்கிள் விபத்தினால் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்துகளில் பகல் வேளைகளில் இடம்பெற்ற விபத்துகளில் 355 பேர் உயிரிழந்துள்ளதுடன், இரவு வேளைகளில் இடம்பெற்ற விபத்துகளில் 311 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இதேவேளை இரவு வேளைகளில் விபத்து ஏற்படுவதற்கன பிரதான காரணம் மது பாவனை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை மோட்டார் சைக்கிள் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு மற்றுமொரு பிரதான காரணியாக தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.