ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசுசி அகாஷி சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினார்.
எனினும், இதன்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதி செயலாளர் ஆகியயோர் கலந்து கொண்டிருந்தனர்.