மின்னேரியா – சமகிபுர பகுதியில் காட்டுயானை தாக்கி ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சமகிபுர பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தமையை ஒளிப்பதிவு செய்ய சென்ற ஊடகவியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பிரியந்த ரத்நாயக்க என்ற 34 வயதுடைய ஊடகவியலாளரே உயிரிழந்துள்ளார்.