Breaking
Mon. Dec 23rd, 2024

– அகமட் எஸ். முகைடீன் –

கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளருமான சிராஸ் மீராசாஹிப் சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதன்போது சாய்ந்தமருது பிரதேச மக்கள் பெரும் ஆதரவுடன் அன்பாக வரவேற்று ஆசீர்வதித்தனர். இச்சந்தர்ப்பத்தில் மக்கள் கருத்துத்தெரிவிக்கையில் பதினைந்து வருடங்கள் அரசியல் அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் வைத்திருந்தபோதிலும் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தவிதமான பிரயோசனமும் இருக்கவில்லை.

எதனையும் செய்யாத இவர்கள் தற்போது யானை மீது ஏறிக்கொண்டு மரத்தைக் காப்பாத்துமாறு கூறுகின்றனர்.

இந்த முஸ்லிம் காங்கிரசுக்கு பாடம் கற்பிக்கும் தறுனம் இதுவென்றும் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது மிகுந்த ஆர்வத்துடன் நமது பிள்ளை சிராஸ் மீராசாஹிபுக்கு வாக்களித்தோம். தற்போது அவருக்கு அதைவிட பன்மடங்கு ஆர்வத்துடனும் ஆசையுடனும் இப்பொதுத் தேர்தலில் வாக்கினை வழங்கி எமது அரசியல் அதிகாரத்தை பெறக் காத்திருக்கின்றோம் எனத் தெரிவித்தனர்.

Related Post