Breaking
Mon. Dec 23rd, 2024
இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை இரா.சம்பந்தன் வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள 82 வயதான சம்பந்தன் பற்றிய சில தகவல்கள்.
•    1933ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி இராஜவரோதயம் சம்பந்தன் திருகோணமலையில் பிறந்தார்.
•    சம்பந்தன் கல்ஓயா திட்டத்தின் களஞ்சிய பொறுப்பதிகாரியான ஏ.இராஜவரோதயத்தின் மகனேயாகும்
•    சம்பந்தன் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார், குருணாகல் புனித அன்னம்மாள், திருகோணமலை புனித ஜோசப் மற்றும் மொரட்வ புனி செபஸ்தியார் கல்லூரிகளில் பாடசாலை கல்வியை தொடர்ந்தார்.
•    பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றி சட்டத்தரணியானார்.
•    சம்பந்தனின் மனைவியின் பெயர் லீலாவதி
•    சம்பந்தனுக்கு சஞ்சீவன்இ செந்தூரன் மற்றும் கிரிசாந்தி ஆகிய மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
•    முதன் முதலாக 1977ம் ஆண்டு சம்பந்தன் பாராளுமன்றிற்கு தெரிவாகியிருந்தார்.
•    1956ம் ஆண்டு சம்பந்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டார்.
•    இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அப்போதைய தலைவர் ஜே.வீ. செல்வநாயகம் 1963 மற்றும் 1970 களில் தேர்தலில் போட்டியிடுமாறு சம்பந்தனை அழைத்த போதிலுமை; அதனை அவர் நிராகரித்திருந்தார்.
•    1972ம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, அகில இலங்கை தமிழர் பேரவை உள்ளிட்டன கூட்டாக இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
•    1977ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டினார்.
•    எவ்வாறெனினும் 1983ம் ஆண்டின் நடுப்பகுதியில் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றை புறக்கணித்திருந்தனர்.
•    கறுப்பு ஜூலை தாக்குதல் 6ம் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்திருந்தனர்.
•    தொடர்ச்சியாக பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்த காரணத்தினால், 1983ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் திகதி சம்பந்தன் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார்.
•    1989ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
•    அதன் பின்னர் 2001ம் ஆண்டு முதல் இதுவரையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்.
சம்பந்தனின் பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட விபரங்கள் வருமாறு
ஆண்டு – மாவட்டம் –  கட்சி  –  வாக்குகள்   –  வெற்றி – தோல்வி
1977 திருகோணமலை  மாவட்டம்  த.வி.கூ ♠   15144 வெற்றி
1989 திருகோணமலை மாவட்டம் த.வி.கூ ♠6048    தோல்வி
2001 திருகோணமலை மாவட்டம் த.தே.கூ ♠40110    வெற்றி
2004 திருகோணமலை மாவட்டம் த.தே.கூ     47735    வெற்றி
2010 திருகோணமலை மாவட்டம் த.தே.கூ     ♠24488    வெற்றி
2015 திருகோணமலை மாவட்டம் த.தே.கூ     ♠33834    வெற்றி

Related Post