Breaking
Mon. Dec 23rd, 2024

– காமிலா பேகம் –

இந்நாட்டின் 34வது சிரேஷ்ட பொலிஸ் மா அதிபராக பூஜித ஜெயசுந்தர அவர்கள் , அரசியல் அமைப்பு சபையின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் இன்று நியமிக்கப்பட்டார்.

புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித சேனாதி பண்டார ஜயசுந்தர அவர்கள்,1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15திகதி குருநாகலை அத்துகல்புரவில் பிறந்தார்.கண்டி தர்மராஜ கல்லூரியில் கல்வி கற்ற இவர்,ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் விசேட பட்டம் பெற்றவராவார் .பயிற்சி பெறும் உதவி பொலிஸ் அதிகாரியாக 1985 மே மாதம் 20ஆம் திகதி பொலிஸ் சேவையில் இணைந்தார்.

உதவி பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றும் போது, குற்ற தடுப்பு பிரிவுக்கு பொறுப்பாக அனுராதபுரம் முதல் கண்டி,ரத்னபுர ,மட்டக்கிளப்பு,போன்ற பிரதேசங்களில் சேவையாற்றிய பூஜித ஜயசுந்தர அவர்கள்,1991ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி பொலிஸ் அதிகாரியாக தரம் உயர்த்தப்பட்டார்.

நிகவரட்டிய,பொலன்னறுவை,கேகல்ல,நுவரேலியா மாவட்டங்களில் நான்கு வருடங்கள் கடமையாற்றிய பூஜித ஜயசுந்தர அவர்கள், பொலிஸ் போதைபொருள் தடுப்பு பிரிவின் பணிப்பாளராகவும் மூன்று வருடங்கள் மிகவும் தியாகபூர்வமாக சேவைகளை தொடர்ந்த ஒருவராவர்.

பிரதி பொலிஸ் மா அதிபராக 2005ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி பதவி உயர்வு பெற்றதுடன் பின் ஒரு மாதம் வரையில் போதை தடுப்பு பிரிவில் சேவையாற்றினார்.அதன் பின் கொழும்பு,வயம்ப,வடக்கு மாகாணம்,கிழக்குமாகாணம் ,மத்திய மாகாணங்களுக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பொறுப்பு வகித்தார்.

2015ஆம் ஆண்டு 27 ஆம் திகதி முதல் மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி வகித்த பூஜித ஜயசுந்தர அவர்கள்,இந்த துறையில் நிறைந்த அனுபவம் பெற்ற அதிகாரி ஆவதுடன்,பிரஜைகள் பொலிஸ் சேவையை ஆரம்பித்து,மக்களுடன் உறவை கட்டியெழுப்புவதில் தியாக சிந்தையுடன் செயற்பட்ட ஒரு திறமை மிக்க அதிகாரியாவார்.

By

Related Post