Breaking
Sun. Dec 22nd, 2024

மாலபே சய்டம் தனியார் பல்கலைக்கழகம் பொய்களால் கல்வியை விற்பதற்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. பதிவு செய்த பெயர் முதலாக அனைத்துமே பொய்கள் தான் எனும் குற்றச்சாட்டினை பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் லகிரு முன்வைத்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மாலபே சய்டம் தனியார் பல்கலைக்கழகம் அரச பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும், பிரதமர் ரணிலும் தற்போது தெரிவித்துள்ளனர்.

எமக்கு அது தனியாருடையதா அல்லது அரசினுடையதா என்ற பிரச்சினையில்லை, அதன் கல்வி செயற்பாடுகள் காரணத்தினாலேயே போராட்டங்களையும் கருத்துகளையும் வெளியிட்டு வருகின்றோம்.

அரச மயமாக்கிவிட்டால் மட்டும் போதாது இதில் நடைபெறும் ஊழல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

அரசிற்கு நாம் எச்சரிக்கை விடுக்கின்றோம் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை யார் சொன்னாலும் எமது போராட்டம் நிறுத்தப்பட மாட்டாது எனவும் லகிரு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

By

Related Post