Breaking
Thu. Dec 26th, 2024

நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற நல்லாட்சி அரசாங்கமானது யார் முன்னிலையும் மண்டியிடாது. எனினும், சகலருக்கும் காது கொடுப்பதற்கு தயாராகவே உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சாதாரண கோரிக்கைகளை யாராவது முன்வைத்தால், அவற்றுக்கு அரசாங்கம் காதுகொடுக்கும்.  எனினும், கண்டித்தோ அல்லது பயமுறுத்தியோ கோரிக்கைகளை வென்றெடுத்துகொள்ளமுடியாது என்றும் அவர் கூறினார். நல்லாட்சி அரசாங்கமானது எதற்கும் முகம் கொடுப்பதற்கு தயாராகவே இருக்கின்றது.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கணிதப் பாடம் நடத்திய அவர், 2V + U = 0 என்றார்.

ஏ என்றால், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வாசுதேவ நாணயக்கார எம்.பி யாவர். V என்றால் உதய கம்மன்பில எம்.பியாவார். இவர்கள் மூவரையும் கூட்டிணால் பூஜியமே வருகின்றது என்றும் அவர்கள் கூறுகின்றவற்றை காதிகொடுப்பதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரரின் மைத்துனராவார். இருவரும் இணைந்தும் வடக்கிலும் தெற்கிலும் இனவாதத்தை தூண்டுகின்றனர். அதேபோல, ஒன்றிணைந்த எதிரணியிருக்கும் இனவாதத்தை தூண்டாமல் மேலெழும்ப முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

By

Related Post