பாடசாலை விடுமுறையில் குறிப்பிடத்தக்க சுற்றுலா பயணிகள் யால தேசிய பூங்காவை பார்வையிட வருவதை முன்னிட்டு யால தேசிய பூங்காவில் உள்நுழையும் வாகனங்களுக்கு புதிய நிபந்தனைகளை விதிக்கவுள்ளதாக வனவிலங்கு திணைக்கள இயக்குனர் ஜெனரல் சுமித் பிலபிடிய தெரிவித்துள்ளார்.
வன விலங்கு மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சபாரி ஜீப் வண்டி சாரதிகள் மற்றும் அவர்களின் சங்கத்திடமும் கலந்துரையாடி இந்த நிபந்தனைகளை விதிக்கவுள்ளதாக எனவே சபாரி ஜீப் வண்டிகள் இந்த மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வனவிலங்கு திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் என இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து சபாரி ஜீப் வண்டிகள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் புதிய நிபந்தனைகள் சாரதிகளுக்கு பெற்று கொடுப்பதுடன், அதனை மீறும் சாரதிகளை கண்கானிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளவுள்ளதாக வனவிலங்கு திணைக்கள இயக்குனர் ஜெனரல் சுமித் பிலபிடிய தெரிவித்துள்ளார்.