Breaking
Wed. Mar 19th, 2025

ருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய பேருந்து சேவையினைஇலங்கை போக்குவரத்து சபை இன்று முதல் ஆரம்பிக்க உள்ளது.

திருகோணமலை பேருந்து நிலையத்தில் இருந்து மாலை 4.00 மணிக்கு புல்மோட்டை முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு புதிய பேருந்து சேவை ஆரம்பித்துவைக்கப்படுகின்றது.

மேலும் பயணிகளின் வேண்டுகோளின் அடிப்படையில் தினமும் நள்ளிரவு 12.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு வவுனியா ஊடாக மற்றொரு சேவையும் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 7.00 மணிக்கு இறுதியான பேருந்து சேவை நடத்தப்பட்டு வந்தது. இதற்கு மேலதிகமாக இப்புதிய சேவை ஆரம்பிக்கப்படுகின்றது என போக்குவரத்து சபை அறிவித்துள்ளது

By

Related Post