– பாறுக் ஷிஹான்-
யாழில் இன்று வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் கௌரவமானதாக இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் 3 ஜும்மா பள்ளிவாசலின் முன்பாக அமைந்துள்ள விசேட செட்டின் கீழ் மக்கள் தமது கையொப்பங்களை இட்டனர்.
மறிச்சுகட்டி தொடர்பில் மக்களுக்கு புதிய கதைகளை பெரும் பான்மையினர் கூறுகின்றனர்.ஆனால் வில்பத்து அமைந்திருப்பது புத்தளம் எல்லையில்ஆனால் மீள்குடியேற்றம் இடம் பெறுவது மன்னார் மறிச்சுக்கட்டி மக்கள் வாழ்ந்த பாரம்பரிய மண்ணில் என்பதை உறக்கச் சொல்வோம்.
ஜனாதிபதியே…இந்த வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதமாக மேற்கொள்ளுங்கள்அதற்கு இதோ எமது கையொப்பங்கள் எனும் தொனிப்பொருளில் இச்செயற்பாடு நடைபெற்றன.
இச்செயற்பாட்டை யாழ் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீன் ஹாஜியார் .யாழ் சமூக சேவக முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் ஒழுங்கு செய்திருந்தனர்