Breaking
Sun. Dec 22nd, 2024

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் அவர்­களின் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்­திற்கு வலுச்­சேர்க்கும் வகை­யிலும் யாழில் பாரிய கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்று இன்­றைய தினம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்நிலையில் நீண்­ட­கா­ல­மாக விசா­ர­ணை­க­ளின்றி மகசின் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் 14பேர் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி

நேற்று (01) செவ்­வாய்க்­கி­ழமை எட்­டா­வது நாளா­கவும் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான வெகு­ஜன அமைப்பின் ஏற்­பாட்டில் இன்று முற்­பகல் 10 மணி­ய­ளவில் யாழ்ப்­பாண பிர­தான பேருந்து நிலை­யத்­திற்கு முன்­பாக இக்­க­வ­ன­யீர்ப்பு போராட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இக்­க­வ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் சிவில் அமைப்­புக்கள், அர­சியல் கட்­சிகள், அர­சியல் கைதி­களின் உற­வி­னர்கள், பொது­மக்கள் உட்­பட அனைத்து தரப்­பி­ன­ரையும் பங்­கேற்று கைதி­களின் விடுதலைக்கு ஒன்றுபட்டு குரலெழுப்புமாறு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான வெகுஜன அமைப்பு மேலும் கோரியுள்ளது.

By

Related Post