-பாறுக் ஷிஹான் –
யாழ்ப்பாணத்தின் முஸ்லிம் மக்கள் வாழும் பல்வேறு பகுதிகள் மழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் அன்றாட வாழக்கை பாதிப்படைந்துள்ளதை காண முடிந்தது.
நேற்று முற்பகல் 11.30 மணி முதல் தொடர்ச்சியாக பெருமழை அப்பகுதிகளில் பெய்துவருகின்றது. சில வீதிகள் ஆங்காங்கே வெள்ள நீரினால் மூடப்பட்டுள்ளன.
இப்பகுதியில் கடந்த சில தினங்களில் நிலவிய கடுமையான வெப்பத்தையடுத்து நேற்று முற்பகல் முதல் கன மழை தொடர்ந்த வண்ணமுள்ளது.
இதனால் கிராம சேவகர் பிரிவுகளான ஜே-85இஜே-86இஜே-87 இஜே-88 பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள நீரினால் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.
சில மக்கள் மேட்டுப்பகுதியில் உள்ள உறவினர் வீடுகளிற்கு இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்.
அத்துடன் இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் கடைகள் மக்கள் குடியிருப்புக்களுக்குள்ளும் மற்றும் அரச அலுவலகங்களுக்குள்ளும் வெள்ள நீர் உட் புகுந்தமையினால் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
குறிப்பாக பொம்மைவெளி பகுதி வெள்ள நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.எனினும் இவ்வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை எந்த ஒரு அதிகாரிகளும் இதுவரை பாரக்கவில்லை.
அத்துடன் அம்மக்களை வைத்து அரசியல் செய்யும் வங்குரோத்து அமைப்புகளும் அரசியல் வாதிகளும் அப்பகுதிக்கு வருகை தந்து மக்களை பார்க்கவில்லை என்ற ஆதங்கத்துடன் மக்கள் உள்ளனர்.