யாழ் முஸ்லீம்கள் அனைத்து விடயங்களிலும் பின்தள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியூதின் தெரிவித்துள்ளார்.
நேற்று 19-12-2014 மாகாண சபையில் நடைபெற்ற வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த சில தினங்களிற்கு முன்னர் அம்மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டனர்.ஆனால் இது வரை பொறுப்பு வாய்ந்தவர்கள் இதுவரை சென்று பார்க்கவில்லை.எனவே இனி வரும் காலங்களில் அவர்களை எம்மக்களாக சென்று பார்வையிட வேண்டும்.அவர்களிற்கு உதவ வேண்டும்.அனைத்து விடயங்களிலும் உள்வாங்க வேண்டும். முதலமைச்சரோ அல்லது மாகாண சபை உறுப்பினர்களோ பாராபட்சம் பார்க்காது உதவ வேண்டும்.
நான் இப்பகுதியில் இல்லாவிட்டாலும் கூட தொலைபேசி வாயிலாக என்னால் இயன்றதை அம்மக்களிற்கு செய்கின்றேன்.செய்வேன்.கடந்த வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட யாழ் முஸ்லீம்களை கேட்பார் பார்ப்பார் இன்றி இருப்பதை ஊடகம் வாயிலாக அறிந்தேன்.அதற்காக என்னால் ஆன முயற்சிகளை செய்துள்ளேன்.
எனவே எமது சேவையை அம்மக்களிற்கு பாரபட்சமின்றி வழங்குவதன் ஊடாக வேலைவாய்ப்பு, வீட்டுப்பிரச்சினை,காணிப்பிரச்சினைஅவர்களை இயல்பு வாழ்க்கைக்கு இட்டுச்செல்ல முடியும்.எனவே அதனை முன்னெடுக்க மாகாண சபை முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.