Breaking
Sat. Dec 28th, 2024

ஊடகப்  பிரிவு 

கடந்த முப்பது வருடங்களாக வடமாகாணத்தில் இருக்கும் தமிழ் முஸ்லிம் சிங்கள மாணவர்கள் போரினாலும் வன்செயலினாலும் தமது கல்வியில் பெரும் பகுதியை இழந்துள்ளனர். அண்மையில் வடமாகணத்துக்கு விஜயம் செய்துள்ள கெளரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க அவர்கள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் கல்வியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்காக விசேட கல்விக் கொள்கை ஒன்றை வகுத்து மாணவர்களின் கல்வி நிலையை பழைய நிலைக்கு கொண்துவர வேண்டும் எனவும் இது சம்பந்தமாக கல்வித் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடும்  தொணியில் கூறி இருந்தார்.

இவ்வேளையில் கடந்த ஒரு மாதமாக ஊடகங்களில் பேசப்பட்டு வரும் முன்னால் ஜனாதிபதியினால் நிர்மாணிக்கப்பட்ட காங்கேசன்துறையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை அல்லது ஜனாதிபதி மகாநாட்டு மண்டபம் பற்றியும் அதை ஆறு நடசத்திர உல்லாச பயணிகளின் விடுதியாக ஆக்க வேண்டும் என மாண்புமிகு ஜனாதிபதியும், கெளரவ பிரதம மந்திரியும் அறிவித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன. இந்நிலையில் நம் முன்னோர்கள் கூறியது போன்று வடமாகாண மாணவர்கள் முன்னிலைக்கு வரவேண்டுமாயின் ஒன்றில் தமது நிலத்தைக் கொத்தி பண்படுத்தி பயிர் செய்து பொருளாதாரத்தை ஈட்டுவதன் மூலமாகவும், அல்லது தமது மூளையை கொத்தி இரவு பகல் பாராது கடின உழைப்பின் மூலம் கல்வி கற்று தமது பெற்றோரின் மூலதனத்தை செலவு செய்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி முன்னிலைக்கு வருவதன் மூலம் பயனீட்டினர்..

இவ்வேளையில் வட-கிழக்கு, தெற்கு கல்விமான்கள் புத்திஜீவிகள் போன்றோர், யாழ் பல்கலைகழகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு போன்றவைகளுக்கு  தமது முழுமையான அழுத்தத்தை கொடுத்து ஐநூறு பேர் தங்கிப் படிக்கக்கூடிய காங்கேசன்துறையில் அமைந்துள்ள கட்டிடத்தை யாழ் பல்கலைகழகத்துக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

அதன் மூலம் வடக்கு, கிழக்கு, மலைநாட்டு மாணவர்கள்  மேலும் ஐநூறு பேர் கல்வி கற்கக் கூடிய சுமூகமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது  இதற்கு நாட்டிலுள்ள பலர்  அழுத்தம் கொடுக்க வேண்டும் என எமது மாணவ சமுதாயத்தின் பெயரில், மன்னாரில் அமைந்துள்ள வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு உரிய தரப்பினரிடம் பணிவாக வேண்டுகோள் விடுக்கின்றது. மேலும் இவற்றை எதிவரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக யாழ் பல்கலைக்கழகம் பொறுப்பேற்க வேண்டும் என மக்கள் எதிர்பார்கின்றனர்.

————————-

ஏ.கே.எம். சியாத்

Related Post