Breaking
Fri. Nov 15th, 2024
யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விடயங்களை அறிவதற்கும் பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைக்கும் நோக்கிலும் மூன்று அமைச்சர்கள் கொண்ட குழு யாழ்.பல்கலைக்கழகத்திற்கு நேற்று (19) விஜயம் மேற்கொண்டது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கருணாரட்ண பரணவிதான ஆகியோரே இவ்வாறு விஜயத்தை மேற்கொண்டு பல்கலைகழக நிர்வாகத்தினர் மாணவ பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

யாழ் பல்கலை கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் பல்கலை கழக வளாகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் குறித்த சம்பவத்தை தீர்த்து வைத்து சுமூகமான சுழலை ஏற்படுத்தி பல்கலைகழகத்தின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இரு தரப்பு மாணவ பிரதிநிதிகள் சார்பில் இங்கு சாதகமான பதில்கள் கிடைத்தததை தொடர்ந்து கல்வி நடவடி;க்கைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பான முடிவுகள் இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பல்கலைக்கழக துணைவேந்தர் நாளை முதல் வவுனியா மற்றும் கிளிநொச்சி வளாகம் யாழ் பல்கலைகழகத்தின் மருத்துவ மற்றும் சித்த மருத்துவ பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் தொடர்ந்து ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விரைவில் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஒரு சில குழுக்களின் கருத்து முரண்பாடுகளால் திட்மிடாத வகையில் இம்மோதல் இடம்பெற்றிருந்ததாகவும் இதுபோன்று இனிவரும் காலங்களில் இடம்பெறாது என்;றும் தமது கல்வி நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ் மற்றும் சிங்க மணவர்களின் பிரதிநிதிகள் இங்கு உறுதியளித்தனர். இதை தொடர்ந்து கருத்து தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா இவ்வாறான விடயங்கள் பல்கலைக்கழக மட்டத்திலேயே தீர்த்து வைப்பது சிறந்தது என்றும் அதற்கான நடவடிக்கைகளை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சகல பல்கலை கழகங்களிலும் அனைத்து இனங்களின் கலாசாரங்களுக்கும் முக்கியத்துவம் வழங்குவது உறுதி செய்யப்பட்டால் இது போன்ற அசம்பாவிதங்கள் இடம்பெறாது என குறிப்பிட்டார்.

By

Related Post