Breaking
Tue. Nov 26th, 2024

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலில் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்தார்.

எமது யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட அநேகமான பகுதிகளில் போதைப்பொருட்களின் விநியோகம் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இந்த விடயத்தை எனது சபையின் கன்னி உரையில் கூட தெரிவித்திருந்தேன்.

குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் ஒரு சிலர் வெளியிடங்களிலிருந்து வருபவர்களுடன் இணைந்து இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தொடர்பிலான தகவல்கள் என்னிடம் தற்போது பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் எவையும் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயங்களாகும். சமூகத்தை சீரழித்து சின்னாபின்னமாக்கும் இச்செயற்பாடுகளை நாம் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்.

இது தவிர மீள்குடியேறி வருகின்ற யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் மத்தியிலும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை அடையாளம் தெரியாத நபர்கள் திணிக்க முயற்சிக்கின்றனர்.

அத்துடன், யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை முற்றாகத் தடைசெய்யக்கூடிய செயற்பாடுகளில் இவ்வாறான விடயங்கள் செல்வாக்கு செலுத்துகிறது.

இந்த சவாலான விடயத்தை முறியடிக்க நாம் முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவை எமது சமூகத்திலிருந்து முற்றாக அகற்றப்படவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Related Post