Breaking
Mon. Dec 23rd, 2024
– பாரூக் ஷிஹான் –
யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை நேற்றையை (25) யாழ் விஜயத்தின்போது ஆராய்துள்ளார் அமைச்சர் றிஷாத் பதியுதீன்.
 
நேற்று திங்கட்கிழமை சுபஹ் தொழுகையின் பின்னர் மோட்டார் சைக்கிள் ஒன்றினை பெற்று யாழ் முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கு சென்று பார்வையிட்ட அவர்; தொடர்ந்து அங்கு சென்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் கேட்டறிந்து கொண்டார்.

blogger-image-415031973

 

மக்களை சந்திக்க சென்ற அமைச்சர் தலைக்கவசத்துடன் இருந்தமையினால் அநேகமானவர்கள்  அவரை அடையாளம் காணவில்லை.
இந்நிலையில் தலைக்கவசத்தை கழற்றியவுடன்  மக்கள் அவரை அடையாளம் கண்டு சூழ்ந்து கொண்டதுடன் தங்கள் பிரச்சினைகளை நேரில் வந்து ஆராய்ந்தமைக்காக பாராட்டினர்.
 
அமைச்சர் அம்மக்கள் வாழும் குடிசைகளை கண்டு கவலை அடைந்தார்.
தொடர்ந்து பொம்மைவெளி (அத்திப்பட்டி) பரைச்சேரி கிராமங்களுக்கும் விஜயம் செய்தார்.

a

 

பின்னர் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற குடியேற்ற கூட்டத்தில் அம்மக்களின் பிரச்சினைகள் குறித்து பிரஸ்தாபித்து பல தீர்வினை பெற்றுக்கொடுத்தார்.

By

Related Post