Breaking
Mon. Dec 23rd, 2024
rb

யாழ்ப்பாணத்திலிருந்து 1990 ஆம் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யபட்ட முஸ்லிம்கள், தமது தாயகமான அப்பிரதேசத்தில் மீள்குடியேற ஆவலுடன் காத்திருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

“யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது பிரதேசத்தில் மீள்குடியேற மிகவும் அவலுடன் காத்திருக்கிறார்கள். இருந்தபோதும் அங்கு காணிகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. 1990 ஆம் ஆண்டு ஒரு குடும்பமாக இருந்தவர்கள் இன்று 2 குடும்பங்களாக அதிகரித்துள்ளனர். இந்த 25 வருட அகதி வாழ்க்கையானது குடும்ப அங்கத்தவர்களை அதிகரிக்கச் செய்துள்ளது.

“இந்நிலையில்யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற இருக்கும் முஸ்லிம்களுக்கு பிரதான சவால், வீடு அதாவது காணி இன்மையாகும். எனவே யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு என காணிகளை ஒதுக்கி, அதில் தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்த சம்பந்தபட்ட தரப்புகளிடம் பரிந்துரை செய்துள்ளேன். இதற்கு உரிய தரப்புக்கள் இணங்குமிடத்து இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக்க முடியும்.

“மீள்குடியேற்றம் மற்றும் மீள்குடியேற்ற மக்களின் நலன்களை கவனித்தல் உள்ளிட்ட விவகாரங்களில் அசமந்தப் போக்கு காணப்படுகிறது. இந்நிலை மாற்றியமைக்கபட்டல் வேண்டும். இதன்பொருட்டு ஏனைய முஸ்லிம் அரசியல் தலைமைகளுடன் இணங்கிச்செல்ல நான் தயாராக இருக்கிறேன். அந்தவகையில் ஜம்மியத்துல் உலமா இதற்கான காத்திரமான பங்களிப்பை நல்க உள்ளது. அவர்களின் தலைமையில் இதற்கான முன்னெடுப்புகள் விரைவுபடுத்தப்படவுள்ளன.” – எனவும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேலும் கூறினார்.

By

Related Post