இர்ஷாத் றஹ்மத்துல்லா
இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்கு வாக்களித்த தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு சமமான முறையில் தமது பணிகளை ஆற்றுவதாக தெரிவித்துள்ளமை தொடர்பில் தமது நன்றியினை தெரிவிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளதுடன்,அதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்கள் தொடர்பிலும் பேச வேண்டும் என்ற கோறிக்கையினையும் முன் வைத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ் விஜயம் செய்தமை தொடர்பிலும்,அங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் கூறியதாவது –
வடக்கில் காணப்பட்ட அசாதாரண சூழலினால் தமிழ் பேசும் மக்கள் இதில் பெரும் பாதிப்புக்களை சந்தித்தனர்.தமிழர்களும்,முஸ்லிம்களும் என்றும் இணைந்தே செயற்பட்டுவந்துள்ளனர்.அதே போல்; இவ்விரு சமூகங்களுக்கும் இடையில் வெளியினை ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன.
தமிழ் பேசும் மக்களின் மூச்சில் முஸ்லிம்களும் சுவாசித்து வந்துள்ளதை நினைவுபடுத்தவிரும்புவதாக தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் இன்னும் நாம் தனி சமூகமாக எண்ணால் மொழியால் தமிழை பேசுகின்ற ஒரு சமூகமாக பரிணாமம் காண வேண்டும்.இன்றைய சவால்கள் நிறைந்த காலத்தில் தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமை மிகவும் தேவைப்பாடு கொண்டதாக இருக்கின்றது.
எப்போதும் நாம் மொழியால் ஒன்றுபட்ட ஒரு சமூகம என்ற அடிப்படையில் எமது செயற்பாடுகளை முன் வைக்க வேண்டும் என்றும் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் வேண்டியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது நேரமின்மை காரணமாக விடயங்கள் பேசப்படாமல் போனதால் அவற்றை எழுத்து மூல ஆவணமாக தயாரித்து அவற்றை ஜனாபதிக்கு கையளிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.