Breaking
Thu. Dec 5th, 2024
கடந்த யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புக்களால் எமது மாவட்ட மக்கள் இழந்தது ஏராளம்.அவற்றில் பெறக் கூடியவற்றை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் ஆளும் கட்சியினை ஆதரிப்பதன் மூலம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என்று வடமாகாண சபைக்கு ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மன்னார மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் அப்துல் றிப்கான் பதியுதீன் கூறினார்.

தலைமன்னார் பியர் கிராமத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் றிப்கான் பதியுதீன் உரையாற்றுகையில் கூறியதாவது –
கடந்த கால கசப்புணர்வுகளையும்,யுத்த ஞாபகத்தையும் கூறிக் கூறி அரசியல் செய்ய முடியாது.அன்று தமிழ்.முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட சக்திகள் இன்றும் அதே பாணியில் தமது பணிகளை முன்னெடுத்துவருகின்றன.மன்னார் மாவட்டம் என்பது இன உறவுக்கு பெயர் போனதொரு மாவட்டமாகும்.அதற்கு சான்றாக முஸ்லிம்களும்,தமிழர்களும் நெருக்கமாக பழகும் முறையிலைிருந்து காணமுடிகின்றது.
இன்று எமது மாவட்டம் பாரிய அபிவிருத்திகளை கண்டுவருகின்றது.மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன்,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் கடும் பிரயத்தனத்தடன் இதனை செய்து வருகின்றனர்.அவர்களது இந்த பணிகளுக்கு மாகாண சபையில் பலம் சேர்க்க வேண்டும்.அதற்காக மாகாண ஆதிகாரத்தை ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  பெற்றாக வேண்டும்.
சில தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் அரசாங்கத்தையும்,அரசாங்கத்தைின் அபிவிருத்திகளையும்,தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரச நியமனங்களையும் விமர்சனம் செய்கின்றனர்.இவர்கள் இந்த மக்களுக்கு எதையும் செய்ததில்லை,செய்கின்றவர்களையும் செய்ய விடுவதில்லை.இப்படியானவர்களை நாம் ஓரம் கட்ட வேண்டும்.அதற்கான நல்லதொரு சந்தரப்பம் மாகாண சபை தேர்தலாகும்.இன்று நாம் எவ்வித பாகுபாடுகளுமின்றி விகிதாசார முறைக்கமைய நியமனங்களை வழங்கியிருக்கின்றோம்.அதே போல் இன்னோரன்ன பணிகளை செய்து வருகின்றோம்,இந்த தேர்தலில் தமிழ் ,முஸ்லிம் மக்கள் வெற்றிலை சின்னத்தை ஆதரித்து வாக்களிப்பதன் மூலம்,இன்னும் அதிகமான நன்மைகளை அடைந்து கொள்ள முடியும் என்றும் வேட்பாளர் றிப்கான் பதியுதீன் கூறினார்.

 

வேட்பாளர் அமீன்,கைத்தொழில்,வணிகத் துறை  அமைச்சரின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முனவ்வர் உட்பட பலரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.

Related Post